கோடை
கோடை


கோடை..
கொடையென கொட்டும்...
கோடை மழையில்
குளித்து குளிர்ந்துகொள்ளும்
வெயில் சுட்டு
வாட்டி எடுத்த... வரண்ட
வாழ்வு!
இருண்டு திரண்டு உருண்டு
பிரண்டு வரும்
கோடையின் கருணைக்கு
குளிர்ந்து கிளர்ந்து எழும்
எண்ணற்ற இதயஞ்சலி
உன்னை கரித்து கொட்டும்
கண்கள்
காண பசுமை இல்ல!
கைக்கெட்டும் தொலைவில்
குடிநீர் இல்லை!
பாதம் பொறுக்கவில்லை!
உச்சி வெயில் எங்கள்
உயிர் அருந்துகிறதே..
சித்திரையின் கத்தரி வெயில்
முத்திரை பதிக்கிறது!
நாவறண்டு..
நாங்கள் சுருண்டு!
காலியான வண்ணகுடங்
களோடு
தெருவில் திரண்டு... அந்த
வரலாற்று படையெடுப்பு தன்னை
பார்க்க தவறுவதில்லை நீ!
வருணன் வரவு..
இருவரும் தரமான சம்பவம்
செய்வீர்!
இந்த காணல் மாரத்தானில்
ஆனாலும் அந்த ஆறுதல்
பரிசு பற்றி சொல்லியே
ஆகவேண்டும்...
தர்பூசணி!
வெள்ளரிக்காய்!
நுங்கு!
உச்சி குளிர வச்சு செய்யும்
கோடை மழை!
வருஷம் முழுக்க வாய் திறவா
பெற்றோர்களை
மௌனம் களைக்கும் மாய திரவுகோல்! என்ற
பெருமையுண்டு உனக்கு!
ஊட்டியும் ஒகேனக்கலும்
கடற்கரை ஈரமணலும்...
பருத்தி ஆடை ஸ்பரிசங்களும்!
கோடையின்
பாதுகாப்பு கவசங்களே!