நீதி தேவதை
நீதி தேவதை


படிக்கின்ற காலத்தில்
பாடம் படிக்காமல்
கோட்டை விட்ட
குருவிகள் நான்கு
பள்ளி கட்டிடத்தில்
பாடம் கேட்க
அமர்ந்தனவே!
வீதிகள் எங்கும்
குடித்துவிட்டு போட்ட
மதுபுட்டிகளின் கொடுரத்தில்
பிள்ளைகளின் கிழிசல்
சட்டை வாழ்க்கை
கண்டு அயர்ந்தனவே!
இடைவிடா செல்லிடபேசி
கோபுரங்கள் உயிர்க்கொல்லியாக
மாறி இரண்டு
உயிர்கள் பலியாக
குருவிகள் தங்கள்
இனம் காக்க
நீதிதேவதையின் காலில
விழுந்தனவே!