காதல்
காதல்


அன்பிலே விதைத்து
ஆசையில் முளைத்து
இன்பத்தை விளைத்து
ஈடில்லா அறுவடை தந்து
உள்ளத்தில் உவகை பூக்க
ஊக்கம்தனை கொடுத்து
என்றும் மறக்க முடியாமல்
ஏழை பணக்காரன் என பாகுபாடின்றி
ஐம்புலனை வென்ற முனிவருக்கும்
ஒரு நொடியில் தோன்றும்
ஓர் அற்புத உணர்வுக் குவியல்
ஔவை தமிழ் மேல் கொண்டது
அஃதே தமிழ் காதல்.