நிச்சலனமான இரவு
நிச்சலனமான இரவு

1 min

356
நிச்சலனமான இவ்விரவின்
மௌனங்களைக் கலைத்து
அவ்வேப்பமரத்தினடிச் சுவரில்
அகாலமாய் அழுகிறது
அக்கரும் பூனை
மீன்கள் இல்லாத
அவ்வானைப் பார்த்து
ஓவென்று ஓலமிடுகிறது...
வலிந்த பார்வைகள்
செருமாந்த நடை
இறுமாப்பு அசைவு
பகட்டான மேனி
இப்படித் திரிந்த
திமிர்ப் பிடித்த
அப்பூனை...
நிச்சலனமான இவ்விரவின்
மௌனங்களைக் கலைத்து
அவ்வேப்பமரத்தினடிச் சுவரில்
அகாலமாய் அழுகிறது...