காதல் விழிகள்!
காதல் விழிகள்!
எல்லா நேரமும்,
எல்லா பார்வையும்
உன்னிடம் என்னை இழுக்கிறது!
எந்த விளிம்பிலும், உன்னை தேட,
என்ன செய்தாய், நீயும் என்னை?
எத்தனை முறைகள் உன்னிடம் நான் தொலைந்து போவது ஏனடா??
அண்ணாந்து உன்னை பார்த்த நொடிகள் எண்ணி,
தலை தரை பார்த்தே சிரிக்கின்றதே!
தராமல் சென்ற புன்சிரிப்பும்,
என்னை கொன்று தின்னுதே!!!
ஏன்,
இந்த உணர்வை எனக்கும் தந்தாய்??
எந்தன் விழிகளும் உன்னில் கரைய??
காணும் பொழுதில், வானும் மண்ணும் தலைகீழாய் மாறுகிறதே!!
எந்த திசையும் நீ!
அத்தனை விசையும் நீ!
திசையும் விசையும் தெரியாமல் திக்கு திணறி போகிறேன்!
என்னை உன்னில் கண்டு கொள்ள,
எத்தனை ஆயுள் இன்னும் வேண்டும்!
தெரியாமல் தவிக்கும் நான்!

