எங்கோ சரிந்தேன்
எங்கோ சரிந்தேன்
உன் பேரில் என்னடா இத்தனை மர்மம்?
எவ்வளவு கோடி புன்னகை எனக்கும் ஏனோ?
இத்துனை தூரம் தனியே கடந்த பொழுதும்,
உன்னை தேடியே என் பயணம் தொடர்கிறது!
தவறி விழுந்தேன் உன்னில்
பாதை தெரிந்தும் தத்தளிக்கிறேன் ஆழ்கடலில்...
அமைதியாய் யுத்தம்,
உன் நினைவுகளில் நான் நித்தம்..
எதுகை மோனை யென எப்போதும் திரிந்து,
உன்னை பார்த்த மயக்கத்தில் எங்கோ சரிந்தேன்!
எந்தன் கணம் யாவும் கனமாகிறது,
உந்தன் ஸ்வாசம் தேடி!
நிதானமாய் நான் யோசித்தாலும்
படபடப்பாக மாற்றுகிறாய்!
பதட்டத்தில் யோசித்தாலும் படமாக மாறுகிறாய்!
என் பாதையில்
எல்லை நீ!
ஆனால் கண்ணுக்கு எட்டாத முடிவும் நீ!
மனம் யாவும் பரவும் மணம் நீ!
மணம் என்றால் அதுவும் நீ!

