நீயே என் மாற்றம்!
நீயே என் மாற்றம்!
எத்தனை ஆயிரம் சிந்தைகள்..
எவ்வளவு சின்ன சண்டைகள்...
காதல் கனவில்,
காலங்கள் நகருதோ!
மாறும் நேரம்,
மாறாமல் நீ!
எது என்று உன்னை நான் எடுக்க!
நீயே என் மாற்றம்!
மனதுக்குள் தோன்றும் குழப்பம் நீ!
அந்த கழகத்தின் விடையும் நீ!
குழந்தை போல என்னை மயக்கி போகிறாய் அந்த கன்னக்குழிகளில்!
ஏனடா!
அட ஏனடா!
என்னை இத்தனை சித்ரவதை செய்கிறாய்!
முதலில் முடிவு நீ என நினைத்தேன்!
முடிவில் முதலாய் வருகிறாய்!
என் புன்னகையாய் உருவம் தரிக்கிறாய்!
என் வெட்கத்தில் கூடை நெய்கிறாய்!
சில நேரங்களில் உன்னை வேண்டாம் என்று நினைக்கிறேன்!
சகல நேரம் நீ வேண்டும் என்று தவிக்கிறேன்!
எனக்கு பதில் கூற விரைவில் வருவாய் என காத்திருக்கும் உனது நான்!

