தேடுகிறேன்!
தேடுகிறேன்!
உன்னை நான் தேடுகிறேன்...
எல்லா நிலைகளிலும் நீ வேண்டும் என்று!
வெற்றியிலும் நீ வேண்டும்!
வீழ்ந்த பொழுதும் நீ வேண்டும்!
அந்த ஆதவன் உதிக்கையில் நீ வேண்டும்!
அந்தி மலரும் பொழுதும் நீ வேண்டும்!
கோடை வெயிலிலும் நீ வேண்டும்!
கோட்டும் மழையிலும் நீ வேண்டும்!
கொஞ்சி பேசிடவும் நீ வேண்டும்!
கோவப்பட்டு கதரிடவும் நீ வேண்டும்!
வழியில் பயமாய் நீ வேண்டும்!
வாழ்வில் பலமாய் நீ வேண்டும்
கண்களில் நீ வேண்டும்!
கதைகளிலும் நீ வேண்டும்!
எல்லாம் நீயாக வேண்டும்!