நாடு போற்ற வாழ்ந்திடு
நாடு போற்ற வாழ்ந்திடு
காலையில் தினமும் எழுந்திடு!
கடமைகளைச் சரியாய் வகுத்திடு!
உடலை நன்றாய் பேணிடு!
உகந்த உணவை உண்டிடு!
ஓடியாடி உழைத்திடு!
ஓய்வை அளவாய் கண்டிடு!
தீயபழக்கத்தைத் துறந்திடு!
தீங்காம் மருந்தினை மறந்திடு !
நீரைச் சேமிக்க எண்ணிடு!
சோறை வீணாக்க நாணிடு!
நாளை வாழ்வை நினைத்திடு!
நன்றே செய்ய பணித்திடு !
மரங்களை மண்ணில் வளர்த்திடு!
மண்ணில் வளத்தைச் சேர்த்திடு !
சுற்றுச்சூழலைக் காத்திடு!
சுகமாய் நீயும் வாழ்ந்திடு!
தோளில் ஏரைச் சுமந்திடு !
துடிப்பாய் உழவைச் செய்திடு!
தாழ்வு அதில் இல்லை உணர்ந்திடு!
உலகம உன்னடி தாழ்ந்திடும் அறிந்திடு!
பெண்சிசுவைக் காத்திடு!
பாலியல்.... பாவம் அறிந்திடு!
பேதை அவள் இல்லையேல்....
பிறவிகள் ஏது? தெரிந்திடு!
பேதங்களை நீயும் களைந்திடு!
பாதகஙகளை நாளும் எதிர்த்திடு!
நன்றாய் கல்வி கற்றிடு!
நாடு போற்ற வாழ்ந்திடு!
