நாளும்....
நாளும்....
உன்னை விட்டு பிரிந்த
அந்த கணங்கள்
கனமான நிமிடங்கள்
கண்களில் தழும்பிய
நீர் துளிகளில் பிம்பமாய் நீ
உன் முகத்தின் உணர்வுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
ஏனோ அதிகமாகிட
மறுபடியும் உணர்ந்தேன்
உன் காதலின் மென்மைதனை
என்னை மறந்திருப்பாயா?