STORYMIRROR

நிலவின் தோழி கனி

Romance Classics Inspirational

4  

நிலவின் தோழி கனி

Romance Classics Inspirational

முதிர்விலும் காதல்

முதிர்விலும் காதல்

1 min
243

திருமணமான பொழுதினில் தொடங்கி

இன்றைய நாள் வரை நம் காதல் 

குறைவில்லாமல் நிறைவாகவே 

சென்று கொண்டிருக்கிறது...


மணித்துளிகள் சென்றது...

நாட்கள் சென்றது...

வாரங்கள் சென்றது...

மாதங்கள் சென்றது...

வருடங்களும் சென்றது...

ஆனால்... நம்மை விட்டு

மூன்றெழுத்து காதல் மட்டும்

விலகிச் செல்லாமல் பசை 

போட்டது போல ஒட்டி உறவாடி

நம்மோடு பயணித்து வருகிறது....


மங்கலான பார்வையும்...

பல்லில்லா பொக்கை வாயும்...

வாய் குளறும் வார்த்தைகளும்...

தோல் சுருங்கிய வரண்ட கன்னமும்...

நிறைத்த வெள்ளை கேசமும்...

சிறு குழந்தை போல

நடக்கும் தளர்வான நடையும்...


வயதான காலத்திலும்

சாலையில் இருவரும் 

கைக் கோர்த்து ஒன்றாக 

நடந்து செல்வது...

ஆறுதலுக்காக நீ 

என் மடி சாய்வது - நான் 

உன் தோள் சாய்வது!!!!


இன்றளவும் 

உனக்கு நீ...

எனக்கு நான்...

என்று அளவில்லா 

அன்பினால் விட்டுக் 

கொடுக்காமல் வாழ்வது...


அனைத்தையும் மறந்து...

காதல் என்னும் உணர்வில்

இன்னும் இளமையாக 

வாழ்ந்துக் கொண்டிருப்பது...

தன்னுள் சரிபாதியாக நினைத்து 

காதலோடு இருப்பது!!!!


இவர்களின் வயது முதிர்வான போதிலும்..‌.

இளமையான காதலோடு வாழும்....

இளம் காதல் ஜோடி தம்பதிகளுக்கு

இந்த கவிதை சமர்ப்பணம்.‌‌..



Rate this content
Log in

Similar tamil poem from Romance