மருத்துவ தேசமே
மருத்துவ தேசமே


கண்ணிற்கு தெரிந்த
கடவுள் நீ!
தனது உபகரணங்களே..
போர்க் கருவிகளாய்!
கையாண்டு...
கண்ணிற்கு தெரியாத
நோய் கிருமிகளையும்!
நோயையும்!
விரட்டி துரத்தி!
தோற்கடித்து...
வெற்றி வாகை சூடி!
மனிதம் காக்கும்!
நடமாடும் தெய்வங்கள்!
வாழ்வில் நல்லொளி ஏற்றும்...
நம்பிக்கை நட்சத்திரங்கள்!
உடலென்னும்..
இயந்திரத்தை!
காத்து நிற்கும் மந்திரமே!
மருத்துவமே!
உனக்கு மனதார..
தலைவணங்கினோம்!