மறையாத நினைவுகள்
மறையாத நினைவுகள்


நீ யாரை விரும்பினாலும் யாருடன் நெருங்கி பழகினாலும் நீ என்னுடன் இருந்த நினைவுகள் ஒருபோதும் மறையப்போவதில்லை..
நீ என்றும் எனதாகவே தெரிகிறாய்..
எவ்வளவு தூரம் ஆழமாக நேசித்தாலும் தன் விருப்பங்கள் நிறைவேறவில்லையென்றால் உடனே அந்த இடத்தை விட்டு வேறுபக்கம் மனம் போக சொல்கின்றது..
என்னிடம் என்ன குறை கண்டாயோ தெரியவில்லை..
நான் உன் தகுதிக்கு தகுந்தார் போல் இல்லையா??
நீ நினைத்ததுபோல் இல்லையா? எதிர்பார்ப்பதுபோல் இல்லையா?
நீ சொல்வதுபோல் நடக்கவில்லையா?
அழகில் குறைவாக உள்ளேனா?
எதுவும் புரியவில்லை
என்னை விட்டு தூரம் செல்லமட்டும் விரும்புகிறாய் என்று நன்றாக புரிகிறது...
ஆனால்
உன்னை விட்டு விலக என்னால் முடியவில்லை
உன்னை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை கண்களில் உன் முகம் மட்டுமே தெரிகிறது காதில் உன் குரல் சத்தம் மட்டுமே கேட்கிறது
இதயம் முழுவதும் உன் நினைவுகளே இருக்கிறது
எங்கும் எதிலும் உன்னை மட்டுமே உணர்கிறேன்
நீ பார்க்கும் பார்வைகள் வேறாக இருக்கலாம் ஆனால் நான் உன்னை மட்டுமே பார்க்கிறேன்..
என்னிடம் பேசினால் போதும் எனது அன்பே கெஞ்சி பெறக்கூடாதென்று தெரியும் ஆனால் உன்னை இழக்க நான் விரும்ப வில்லை..