மின்னஞ்சல்
மின்னஞ்சல்
இரு இதயங்கள்
மொழிகள்
எந்த கலப்படம்
இல்லாமல்
தூய்மையாய்
பரிமாரும் வழி
மின் அஞ்சல்....
மின் கடிதம் வழியே ....
வணிக வேலை நன்றே அரங்கேரும் ....
சமத்துவமாய் செய்தி இனிதே சேரும் .....
தொலை தொடர்பு திறனே செயல்படும் ......
மின் அஞ்சலே ....
உன் அன்னை கணினியா ....
உன் தந்தை இணையதளமா ......
மின் கடிதமே....
முகவரிக்கு முகவரி
சமர்ப்பிக்கும் மடல் ....
மின் கடிதமே....
உன்னால் நாளுக்கு நாள்
தூரம் குறுகி போக கரணம்
நீ எடுக்கும் ஓட்டமா ....
கடமையின் ஆற்றலா ....
மின் அஞ்சலே உன்...
மொழிக்கு எல்லையே இல்லை ....
நீ.....
இளமையாய் இனம் தாண்டி....
மௌனமாய் மதம் தாண்டி ....
மதில் ஏறி மாநிலம் தாண்டி ....
விநாடியில் கடல் தாண்டி ....
தடை இன்றி வேகமாய்
சேவை செய்வது ஏன் ...?
முகவர்களை மன நிறைவு செய்யவா .....!
நல்ல வேலை
இந்த கொரோனா காலத்தில்
நீ மட்டும் இல்லையென்றால்
மனதில் எழும் எண்ணங்கள்
எழுத்தில் காண இயலுமோ .....!!!