STORYMIRROR

Delphiya Nancy

Fantasy Inspirational Children

4  

Delphiya Nancy

Fantasy Inspirational Children

குழந்தை வரம்

குழந்தை வரம்

1 min
366

வரமாய் வந்தவனே

வலி தீர்க்க பிறந்தவனே

வருடத்தை வாரமாக்கியவனே

வஞ்சமில்லா சிரிப்பழகனே...

நிலா தேயும்

உன் வட்ட முகம் கண்டு

மின்மினி பூச்சி ஒளி வாங்கும்

ஜொலிக்கும் உன் மேணியைக் கொண்டு

வண்ணத்துப் பூச்சி பொறாமைக்கொள்ளும்

உன் சிவப்பு வண்ண உதட்டைக் கண்டு...

பொசு பொசு கண்ணத்தை

பருத்திப் பஞ்சு கொஞ்சிப்போக

நெற்றியிலிருந்து மூக்கு வரை

குட்டி தேவதைகள் சறுக்கி விளையாட

கனவென அதைக்கண்டு

தூக்கத்திலே நீ சிரிக்க

உன் பொக்கை வாய் சிரிப்பினிலே

விழுந்துக் கிடக்குதடா என் மனம்...

வண்டுகளாய்

உன் கண்கள் எனைத்தேட

கோவைக்கணி

உதடுகள் பிதுங்க

இடியாய்

உன் அழுகுரல் கேட்கும் முன்

மின்னலாய் நிற்பேன்

உன் தேவை தீர்க்க...

பிஞ்சு விரல்கள் எனைக்கிள்ள

தண்டனைக் கொடுத்தேன்

கோடி முத்தத்தால்...

பசியென நீ அழுதால்

புசிப்பதை மறந்து

உன் பசி தீர்த்தேன்...

உன் ஸ்பரிசம் பட்டு

உதைகளை ரசித்து

உனையே சுமந்து

உனக்காய் வாழும்

வாழ்வைத் தாண்டி

பணிக்குத்தான் செல்வேனோ???

இல்லை இப்படியே தொடர்வேனோ???



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy