கடவுள் எங்கே?
கடவுள் எங்கே?
பணி முடிந்து வீடு திரும்பும் நேரம்!
இருசக்கர வாகனம் காற்றில் பறக்க
நாகம் ஒன்று நகராமல் நடுரோட்டில் கிடக்க...
எதிரே வந்தவன் எத்தனித்து எச்சரிக்கை விடுக்க....
சட்டென்று பிரேக் அடிக்க ....
சற்று தொலைவில் சறுக்கிட்டு நின்றது வண்டி....
ஒரு கணம் கலங்கி போனது குண்டி....
ஒரு நொடி தாமதம் ஆயினும்
வண்டி பாம்பின் நடு உடலில்!
விரியன்! கட்டுவிரியன்!
வந்து விட்டது!
பாதையைக் கடக்க தயக்கம்!
வண்டியின் அதிர்வினை உணர்ந்த காரணத்தால்...
எதிர்வினை ஆற்ற யோசனை !
அடடா! இ றைவா நீ எங்குமில்லை...
இங்கே இருக்கிறாய்!
மெய்சிலிர்த்தது...
கண்ணீர் துளிர்த்தது...
உன் படைப்பின் அதிசயத்தை எண்ணவா?
எமை காத்த விசயத்தை எண்ணவா?
மெய்மறந்தேன்
மெல்ல நகர்ந்தேன்
வாழ்வின் சில தருணங்களில்
நமக்கு ஆறுதலாய்....
விழி பிதுங்கி நிற்கும் போது
நமக்கு உதவியாய்....
வாழ்வு வறளும் போது
சின்ன மகிழ்ச்சி நீரூற்றாய்...
ஆபத்து காலத்தில்
சின்ன சின்ன எச்சரிக்கையாய்.... நம்மைக் காக்கும் மனிதர்களே கடவுள்கள்!
சுற்றி வாழும் மனிதக் கடவுள்களை
நேசிப்போம்!
மனித நேயத்தையே சுவாசிப்போம்!
கடவுள்கள் நம்மோடு தான்
மனித வடிவத்தில்!
