STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

கரங்கள் உயர்ந்தே நிற்கட்டும்

கரங்கள் உயர்ந்தே நிற்கட்டும்

1 min
184

உறவுகளை மறந்து...

உணவினை துறந்து...

உறக்கத்தை இழந்து...

உத்தியோகத்தையே மணந்து...

உடல்நலம் பாராது....

உளைச்சலுக்கு சோராது... 

உழைப்பெனும் விதையிட்டு... 

வியர்வையெனும் நீர் கண்டு

குருதியெனும் உரமிட்டு... 

விளைந்த விளைச்சல் சம்பளம்!

வட்டமிடும் பருந்துகளாய்... 

கண்கொத்தி பாம்புகளாய்... 

இலஞ்சமே இலட்சியமாய்... 

நாளும் சுரண்டும்....

அதில் உழன்று வாழும்

பலருக்குப் புரிவதில்லை!

இது அவனது...

 தவம்...

செந்நீர்...

கண்ணீர்...

வியர்வை...

தியாகம்....

குடும்ப வண்டிக்கான பெட்ரோல் என்று!இலஞ்சம் தவிர்!

நெஞ்சம் நிமிர்..._நீ

ஏடுகளில் மட்டுமே தஞ்சம் புகுந்து...

மஞ்சம் கண்டாய்!

வாழ்வில் ஏனோ பஞ்சம் ஆனாய்...!

நண்பனே, உன் ....

நேரிய குணத்தால்....

சீரிய பணியால்...

இலஞ்சப் பிணியை நீக்கு!

நல்இலட்சியத்தை அணியாக்கு! 

கடமையைச் செய்!

 கடனுக்காக செய்யாதே!

எதிர் கொண்டு நட!

எதிர் கண்டு நடவாதே!

உழைப்பைக் கொடு! 

பிறர் உழைப்பை தொடாதே!

நீ மட்டுமல்ல ...

உன் கரங்களும் உயர்ந்தே நிற்கட்டும்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational