கோலுசொலி தியானம்
கோலுசொலி தியானம்
விளையாட்டின் இசைகள்
கணுக்காலில் கொலுசு
தவழும் கொலுசின்
இசையில்
காதலின் அரங்கேற்றம்!
கொலுசின் சினுங்கள்களில்
பட்டாம்பூச்சி மனதில் சிறகடிக்க
இதயத்தில் குளிர்காலத்தை
உணர்ந்தேன்!
கடைக்கண் பார்வையுடன்
கால் கொலுசொலி
இசையும் சேர்ந்தால்
முரண்பாடுகள் முற்றுப் பெறும்!
காதலில்
தன்னை மறப்பதால்
காதல் தியானத்திற்குச் சமம்!
காதலால் ஆன்மா மிளிரும்!
காதலால் இறை உணரலாம்!
சிற்றின்ப நிலையில்
நேரத்தின் உறைநிலையில்
பேரின்பம் ஒரு நொடி புரியும்!

