கொக்கு பற! பற!
கொக்கு பற! பற!

1 min

331
என்னிலிருந்து என் இரு தோள்களும் கழன்றுவிட்டன
இதயத்தை இழந்து விட்டேன்
ஒவ்வொரு நேர்முகத் தேர்விலும்
மீனைத் தவறவிட்ட கொக்கு நான்
நான் பீனிக்ஸ் பறவை அல்ல
கஜினி முகமது அல்ல
மீண்டும் மீண்டு எழ
துணிவூட்டத் துணையில்லை
நம்பிக்கை தர நண்பனில்லை
உயிர் கொடுக்க உறவுகளில்லை
. . . . . . ..
காலம் மட்டுமே கைகொடுத்தது
கடந்தவற்றைக் கரைத்துவிட்டது
தோள்களும் இதயமும் திரும்ப வந்தன
இதோ,
வேலை கிடைத்தபின் வேதனை தீர்ந்தபின்
அலுவலக மேசைமேல் அனந்த சயனம்!