காதலுக்கு கண்ணில்லை
காதலுக்கு கண்ணில்லை
காதல் வந்தாலே
கண்களில் மின்னல் வெட்டும்...
காது கிழியும் சத்தத்திலும்
கள்வனின் குரல் மட்டும்
செவி நுழைந்து
மூளையை அடையும்...
அது அவனைக் காணச்சொல்லி
கண்களுக்கு கட்டைளையிடும்
இமைகள் வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடிக்கும்...
<
/p>
அவனைக் காணும் நொடியில்
இதயம் லப்டப் என
கைத்தட்டி
அவனை வரவேற்கும்
அருகில் அவன் வர உடல் வேர்க்கும்
காதல் பரவிடும் இரு வேருக்கும்...
காதல் பரிமாற்றம் நடக்கும்
மனத்திரையில்
சுற்றி இருக்கும் எதுவும் தெரியாது
விழித்திரையில்...