காளை அப்பா
காளை அப்பா
வண்டி மாடாய் பாரங்களை
இழுத்த வேளையிலும்
வயலில் ஏருடன் பேசி சொகுசாய்
வாழ்ந்து களித்த நாட்கள் திரும்பி
வருமோ!
பக்கத்து வீட்டு பசுவுடன் உழைத்து களைத்த
மீதமுள்ள நாளில் சொகுசாய் பேசி
மகவை ஈன்ற நாள் மனதில்
பச்சைமரமாய் பதிய எனது பேரன்
கிடைமாடாய் விற்கையில் அழுத
கண்ணீர் இன்னமும் காயலையே!
சாலைக்கு டீசல் வண்டியும்
வயலுக்கு உழ வண்டியும் வந்ததால்
நாங்கள் இவ்வுலகிற்கு
சீண்டாப் பொருளானோம்!
இயற்கை தரும் தலைமுறையே
ஆரோக்கியம் என்பதை
மறந்த மனித இனம் என்று மாறுமோ!
உடல்நலம் காக்க
செயற்கை பிள்ளைகள் பயன்படுமோ!!
ஜல்லிக்கட்டில் மட்டும்
ஓட வளர்க்கப்படும்
எங்கள் இனம் இனி தழைக்குமோ!