இயன்றதை செய்வோம்...!
இயன்றதை செய்வோம்...!
உதவி செய்வதற்கு நம்மிடம் நிறைய பொருள் இருக்க வேண்டும்
அப்பொழுது தான் மற்றவர்களுக்கு உதவ முடியும்
என எண்ணிக்கொண்டு இருத்தல் தவறு...
உதவி செய்ய வேண்டும் என்ற மனம் இருக்க வேண்டும்
மனம் இருந்தால் தானே அதை எப்படி
செயல்படுத்துவது என்ற எண்ணம் உதிக்கும்
நிறைய செய்ய வேண்டும் பெரிதாக செய்ய வேண்டும் என்றில்லை
இல்லை என வருபவரிடத்து இல்லை என சொல்லாமல்
நம்மால் இயன்றதை செய்தால் அவர்கள் மனமும் குளிரும்
உதடுகளும் புன்னகை பூக்கும்...
முடிந்ததை செய்வோம் மனப்பூர்வமான அர்ப்பணிப்புடன்
புண்ணியம் கிட்டும் என்ற எண்ணம் இல்லாது....!!!
