இதோ வந்து விட்டாள்
இதோ வந்து விட்டாள்
வான வீதியில் மின்னல் கீற்று சரம் சரமாய் பாய....
மேக தூதுவனின் முழக்கங்கள்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் இடியென செவி பிளக்க....
வருண தேவன் தலைமையில் வாயுதேவன் கொடி அசைத்து வைக்க....
விண்ணகம் நோக்கி எழுந்த குரல் கேட்டு மண்ணகம் நோக்கி....
இதோ மழை தேவதை புறப்பட்டு விட்டாள்!
மரம் செடி கொடிகள் கரம் அசைத்து வரவேற்க.....
பறவைகள் தேவகானம் முழங்க .....
நுதல்கள் பாடல்கள் இசைத்திட.....
எங்கும் ஆனந்த ராகம் கேட்டிட...
இதோ வந்து விட்டாள்!
அமுதை பாரபட்சமின்றி...
எல்லோருக்கும் அள்ளி வழங்கிட.....
புவியெங்கும் வெள்ளம் பெருக்கெடுக்க....
தஞ்சமென நாடி வந்தோரின் பஞ்சம் போக்கிட.....
வந்து விட்டாள் எங்கள் மழை தேவதை....