STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

இரை தேடிச் சென்ற

இரை தேடிச் சென்ற

1 min
1.6K

கண் மூடிக் கிடந்தால்

அலாரம் எரிச்சலூட்டுகிறது

கண் திறந்து பார்த்தால்

கடிகாரம் பதட்டமூட்டுகிறது!

அடுத்து என்ன?

ஆர்ப்பாட்டங்கள்

பிள்ளைகளின் பிடிவாதங்கள்!

புருஷனோடு எதிர்வாதங்கள்!

பசித்தீ

பதட்டம் 

பயம்

பணிச்சுமை

பரபரப்பு 

பாடி ஃப்ரஷர் 

பணிப்ரஷர்

பிள்ளைகள் ப்ரஷர்

பகல் பொழுது 

படு வேகமாக சுழல்கிறது!

இரவு வேளையில் 

6 மணி நேரம்?

 உடல் தளர்ந்து 

ஓய்ந்து கிடக்கிறது! 

தன்னிலை மறந்து 

சாய்ந்து கிடக்கிறது!

உறங்கும் வேளை தான் 

உரத்த சிந்தனை யில்லை!

உடல் நிந்தனையில்லை!

ஓடுகிறோம்! 

ஓடிக்கொண்டே இருக்கிறோம்!

உணவுக்காகவே சம்பாத்தியம்!

உட்கார்ந்து உண்டதில்லை!

வாழ்ந்து மகிழத் தான் வீடு!

களைப்பாற விழுந்து புரண்டதில்லை! 

பிள்ளைகளுக்காகத் தான் ஓட்டம்!

ஓய்வு நேரத்தில் ஒரு வார்த்தை பேசுவதில்லை!

எப்போதும் காட்டம்

முகத்தில் வாட்டம்!

தினமும் ஓர் ஓட்டம்!

நிறைவேறுகிறதா வாழ்க்கைத் திட்டம்? 

ஆளுக்கு ஒரு மூலை 

அவரவர் வேலை? 

ஆன்ட்ராய்டில் லீலை!

முடிந்து விடுகிறது மாலை!

விடிந்து விடுகிறது காலை! 

இல்லம் தேடி வருகிறோம்...

இரை தேடிச் சென்ற பறவை போலே!

அங்கே மொழியாடல்....

இங்கோ விழிமூடல்!

இரவுப் பொழுது கண்

இமைக்கும் நொடியில்

காலைப் பொழுது மனம்

 கணக்கும் படியில்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational