எனது கவிதை வரிகள்!
எனது கவிதை வரிகள்!
எனது கவிதைகளோடு எனக்கிருந்த நட்பின் ஆழம் அதிகமாய் இருக்கிறதே!
எனது கவிதைகள் புன்னகையில் முகம் சிவந்து போகிறதே!
எனது ஒருதலைக் காதலைப் பற்றி நான் எழுதும் பொழுதினிலே!
எனது கவிதை வரிகள் குறைவாக இருந்தால் கவலை கொள்பவை எனது தொடர்ச்சியான நினைவுகளே!
எனது கவிதைகளின் எண்ணக் குறியீடுகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் என்றும் நிறம் மாறாமல் இருக்கிறதே!
எனது கவிதைகளில் புதிய கருத்துக்களில் தாக்கத்தால் புதிய நிறங்களின் கருத்துக் களையும் ஏற்றுக் கொண்டு இருக்கிறேனே!
எனது கவிதைகளில் அனைத்து நிறங்களின் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொண்டு புது விதக் கொண்டாட்டத்திற்குத் தயாராக இருக்கிறேனே!
எனது கவிதை வரிகளை எனது அனுபவங்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினாலும் என்றும் எனது துயரமான நிகழ்வுகள் எனது ஆழ்மனதில் எப்பொழுதும் நினைவில் வருகிறதே!
எனது கவிதை வரிகள் எனது வாழ்வின் தவறுகளைத் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கிறதே!
எனது கவிதை வரிகள் ஒவ்வொரு ஆண்டும் எனது அனுபவத்திற்கேற்றவாறு தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டே வருகிறதே!
எனது கவிதை வரிகள் அடுத்த தலை முறைக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டு இருக்கிறேனே!
