என்னைச் சுற்றிய நறுமணம்
என்னைச் சுற்றிய நறுமணம்


வாய்க்கால் கரையோரம் வாழும் மீனெல்லாம்
வளைந்து நெளிந்து ஓடும் வயலோரம்
கம்மாத் தண்ணீரும் கால்வாய் நீராகும்
கெழுத்தி கெண்டைங்க துள்ளி விளையாடும்
நண்டு நத்தையும் நாங்கூழ்ப்
புழுவும்
உண்டு திமிரேறும் உடலும்
உரமேறும்
நாரை கொக்குனு நாத்தைச்
சுற்றியே
சகதி வாசத்தில் சடுகுடு விளையாடும்
கரம்பை மண்ணுமிங்கே களிமண் ஆகிவிடும்
கலப்பை ஏருமிங்கே காலை ஊன்றிவிடும்
ஆழ உழுதாலே அடிமண்
மேலேறும்
ஏழை எங்களுக்குச் சந்தனக் கூழாகும்
வெளஞ்ச பயிரெல்லாம் வேர்வை வாசந்தான்
களத்து மேடெல்லாம் கதிரு வீசுந்தான்
அவுச்சுப் போட்டாலே அரிசிப் புழுங்கலாம்
அப்படியே அரைச்சாக்க அரிசிப் பச்சையாம்
ஆக்கி உண்டாலே அமிர்தம் இதுவாகும்
காக்கி நெல்லுமே வெள்ளை உடம்பாகும்
மீதம் இருந்தாக்கா பழைய சோறாகும்
நீச்சத் தண்ணிக்கு நறுமணம் ஏதாகும்.
( உழத்தி மகன் )