என் கண்ணீரின் சாபம்
என் கண்ணீரின் சாபம்

1 min

23.5K
உன்னைத்தொடர்ந்து வந்து
கேள்விகள் கேட்கும்
என் கண்ணீரின் சாபம்
வார்த்தைகள் தடுமாறிட
கண்ணீர் முத்துக்கள்
என் கன்னங்களில்
உருண்டோட வைத்தாய்!
விம்மி வெடித்து விடுமோ என
என் இதயத்தில் ஏற்படுத்திய
அந்த வலியின் நெகிழ்வினில்
பெருக்கடுத்து ஓடிடும்
என் கண்ணீரின் சாபம்
உன்னை ஒரு நாள்
நிச்சயமாய் ஒரு பதிலினை
கூற வைத்திடும் !