சுற்றுலா! சுற்றுலா!
சுற்றுலா! சுற்றுலா!
பார்க்காத இடங்களைப் பார்த்திட
இயற்கையை இனிதே ரசித்திட
மலைகளைப் பார்த்து மகிழ்ந்திட
சிற்பக்கலைகளை சிந்தையில் செதுக்கிட
கல்விக்காக பழஞ்சுவடிகளை தேடிட
வணிகம் வளமையுடன் வழிவிட
ஏற்றுமதி இறக்குமதியில் சிறந்திட
பயணப்பணி முகமை வழிகாட்டிட
பன்னாட்டுப் பொருள்கள் பரிமாற
வாணிகச் சமநிலை சாதகமாக
தங்குமிடம் தற்காலிக வீடாக
இன்பப்பொழுதுபோக்கில் இனிமை காண
போக்குவரத்து துறையில் முன்னேறிட
தொடர்வண்டிப் பயணம் தொடங்கிட
சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட
விடுமுறைக்காக விழித்து இருக்க
ஓவியங்களில் உவகை கொள்ள
தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள
அறியாதவற்றை அறிந்து கொள்ள
புரியாதவற்றை புரிந்து கொள்ள
தேசிய வருமானத்தை சீர்செய்ய
பண்பாட்டைக் கண்டு பரவசமடைய
கலாச்சாரத் தேவைகளை நிறைவுசெய்ய
அந்நியச் செலாவணியை ஈட்டித்தர
வரலாற்றுக்கு முன் உணவு தேடி அலைந்து
பின்னாளில் திரைகடலோடியும் திரவியம் தேடி
இன்றைய காலத்தில் அறிவு வளர்ச்சியில்
பயணமே வாழ்வின் எல்லை வரை!
