STORYMIRROR

POORNIMA S

Inspirational

4  

POORNIMA S

Inspirational

வேளாண்மையின் பெருமை!

வேளாண்மையின் பெருமை!

1 min
323

வேளாண்மை எங்கள் மேலாண்மை

என்றும் மறவா இறையாண்மை

சுதந்திர நாட்டின் நடுநிலைமை

திறமிகு மக்களின் அறிவாண்மை!

உலகிற்கு

அச்சாணி வேளாண்

உயிர்கள் தழைக்க

 உணவு‌ வழங்குவதே வேளாண்

நெத்தி வியர்வை நிலம் சிந்தி

முத்தாக நெல் மணிகளை

விளையச் செய்பவதே வேளாண்

உமக்கு ஈடாக

எத்தொழிலுமே இல்லை

ஆம்

உம்மையாளும் காராளனின்

பெருமைகளுக்கும் குறைவில்லை

காலம் கடந்தாச்சு

மாரி மும்மாரியும்

மாறிமாறி பொழிகிறது

களத்துமேடும் நிறைகிறது

வேளாண் கல்வி பெருகுது

வேளாண்மை தொழில் ஓங்குது

தொழிற்சாலையும் செழிக்குது

வேளாண் புகழ் பார் போற்றுது

தொழில் நுட்பமே தொலைக்காட்சி

திறன்பேசியே திறமைக்கு சாட்சி

கழனியெங்கும் காராளன் கட்சி

எத்திசையிலும் வேளாண் ஆட்சி!

துணிந்து விவசாயத்தைக் காப்போம்

சேர்ந்து விண்ணை வியப்போம்

இணைத்து வேளாண்மையை ஆதரிப்போம்

தனித்திரு தாய்நாட்டை பாதுகாப்போம்!

விவசாயத்திற்கு கொடுக்கும் கை

நல்விடியலின் மேலான நம்பிக்கை!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational