STORYMIRROR

POORNIMA S

Inspirational

4  

POORNIMA S

Inspirational

கலையே, கைத்தறியே!

கலையே, கைத்தறியே!

1 min
258


நரம்புகள் அனைத்தும் இணைய

சில நொடிக்கொரு இழை இணைய

அதிகாலையிலே தொழில் தொடங்க

ஆகாரம் பழையசோறு கஞ்சியே!


காதிநாயகன் காந்தியின் அணிகலனே

கர்மவீரர் காமராசரின் கம்பீரமே

நாட்டின் மானத்தைக் காத்த சரித்திரமே

தலைவர்கள் மானத்தைக் காத்த சித்திரமே!


தரணியெங்கும் கைத்தறம் முன்னேற

தறிக்கலைஞர்கள் வாழ்வு சிறக்க

தன்னலமற்ற தலைமுறை வாழ்த்த

தறி முன் அனைத்து இயந்திரமும் தோற்க!


நெசவுத்தொழிலால் நம் தேசம் நிமிர நிமிர

பாமரர் நெஞ்சில் சுயமரியாதை ஒங்க ஒங்க

இடைவிடாது கேட்கும் கைத்தறி ஓசை,

இமைக்கா கைத்தறிக் கலைஞர்களின் ஆசை!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational