காந்தி
காந்தி
காந்தி என்னும் அகராதி
பாரெங்கும் காவலின் மதி!
சொற்களில் ஒரு சுருதி
அறப்போராட்டத்தின் பதி!
தியாகியின் வாழ்வில் பாதி
கனவிலே கரைந்தது மீதி!
மேகம்போல் களைய சாதி
மேன்மை மெய்ப்படும் சோதி!
பஞ்சமில்லா உணவின் கதி
பதற்றமில்லா வாழ்வின் விதி!
சிறையில் இருந்ததோ சதி
மக்கள் மனத்திருடலின் சேதி!
சொற்களை உணவாக கருதி
அகிம்சையை நானவாக மருதி
தித்திக்கும் பாரெங்கும் பிரதி
முழங்கட்டும் எங்கள் பரிதி!
வாழ்வின் தத்துவமே ஓதி
தலைநிமிர்ந்து வாழ்வதைப் போதி!
இந்தியரின் தலையாய காதி
விடுதலையின் உலக நீதி!
பணத்தில் சிரிப்பை சிந்தி
மக்கள் மனதிலே ஏந்தி
அகிம்சை நாயகனை முந்தி
தரணியே பாடும் காந்தி!
