விலக்கு, மதுவிலக்கு!
விலக்கு, மதுவிலக்கு!
மக்கள் நலம்பெற
மாநிலம் வளம்பெற
திறமைகள் பலம்பெற
எண்ணங்கள் ஏற்றம்பெற
கலைகள் சிறப்புற
வித்தைகள் விழிப்புற
கூடாநட்பு மறைவுற
குற்றங்கள் தடையுற
வாய்ப்புகள் வழிபெற
தடங்கல்கள் தடையற
பயிற்சிகள் பொலிவுற
முயற்சிகள் முன்னேற
களவுகள் விடைபெற
சாதனைகள் நடைபெற
விபத்துக்கள் தடுமாற
தடுமாற்றம் தடம்மாற
உயிரிழப்பு இளைப்பாற
கற்றவை பயன்பெற
வாழ்வில் வெற்றிபெற
மதுவிலக்கே ஒளிபெற!
