ஆசிரியர்
ஆசிரியர்
தன்னிகரில்லாத அறிவின் தந்தையாக
தன்னலமில்லாத அன்பின் தாயாக
சிறாரை சிற்பமாக்கும் உயிரோவியராக
உலகிற்கு நம்மைக்காட்டும் கண்ணாடியாக
குழந்தைகளைப் பேணிக்காக்கும் பெற்றோராக
நம்பிக்கை கொடுக்கும் நல்லாசானாக
எழுதுகோல் ஆயுதத்தின் எழுச்சியாக
எண்ணங்களை நல்வழிப்படுத்தும் எளியவாராக
எட்டுக்கல்வியோடுப் பொதுக்கல்வி போதிப்பவராக
கற்பனையைத் தூண்டும் தூண்டுகோலாக
சமுதாயத்தை சீர்திருத்தும் சமூகசிற்பியாக
தலையெழுத்துகளைத் திருத்தும் குருவாக
அறிவுதாகம் தீர்க்கும் அருவியாக
அறியாமை நீக்கும் அறிவொளியாக
மூளையைப் பதப்படுத்தும் குயவராக
ஒளிகாட்டும் அணையா ஒளிச்சுடராக
வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக
ஏற்றத்தில் ஏற்றிவிடும் ஏணிப்படிகளாக
சாதனையாளராக மாற்றும் சாகப்தமாக
உயர் நிலை கொடுக்கும் உளியாக
அழியாபுகழ் வழங்கும் ஆசானாக
கல்விக்கடலாக எழுத்தறிவிக்கும் இறைவனாக
ஆண்டு பல கடந்தாலும், அனைத்து புகழும்
ஆசிரியரின் கல்விப்பணிக்கு அர்ப்பணம்
மாணவர்களின் வெற்றிக்கு சமர்ப்பணம்!
