நூலகமே! அறிவு உலகமே!
நூலகமே! அறிவு உலகமே!
அறிஞர்களின் அறிவாலயமே
மேதைகளின் பள்ளியறையே
கலைஞர்களின் களஞ்சியமே
விஞ்ஞானிகளின் கருவிழியே!
திறமைகளின் மாளிகையே
ஆன்றோர்களின் கருவூலமே
சான்றோர்களின் சிந்தனையே
நுண்ணறிவின் நூதனமே!
சமத்துவமான சரித்திரமே
ஆயிரமாயிரம் பொக்கிஷமே
அமைதியின் பிறப்பிடமே
மாமனிதர்களின் மணிமகுடமே!
விருட்சமான வாயிற்கதவே
வண்ணமிகு வாசகசாலையே
சாதி பேதமில்லா சகாப்தமே
சாதனைகளின் சுவடிச்சாலையே!
வல்லுனர்களின் வலைத்தளமே
ஏழைகளின் இணையத்தளமே
அறிவின் அட்சயபாத்திரமே
உலகின் காலக்கண்ணாடியே!
