அவளும் நானும்
அவளும் நானும்


முன்னால போறவளே
மூனு காலு கொண்டக்காரி
பின்னால மாமன் வாரேன்
என்னானு கேட்டுப் போடி
கண்ணழகி உன்னக் காண
கம்மா ஓரம் காத்திருந்தேன் கண்ணடிக்க ஓடி வந்த
கருவாச்சி என்னத் தேடி
நெருஞ்சி முள்ளுக் குத்த
பாதமெல்லாம் இரத்தம் தானே வரிஞ்சிக் கட்டிக் கிட்டு
உயிர்போக வந்தேன் ஓடி
வலிய மறந்து நீயும்
வாமடையில் ஏறி நின்ன
விழியில் தெரிஞ்ச வலி
நெஞ்சுருகச் செய்த தடி
உப்புக் கல்லு ஒத்தடம்
உங்க ஆத்தா கொடுக்கையில உதட்டோரச் சுழிப்பில் நானும்
உசுரையே விட்டேன் அடி
உன் கழுத
்தில் தாலிகட்டி
உன்னுடனே சேர்ந்து வாழ
என்னோட அப்பன நான்
எதிர்த்து நின்ன காலமடி
பழச நெனச்சு இப்போ
பாவிநானும் என்ன செய்ய
வயசு கடந்து போச்சு
சொல்லுதிந்த நரச்ச முடி
பெத்த புள்ள எல்லாம்
தொல்லயினு நம்மை வெறுக்க வத்துன வயிறு ஓட
வைராக்கிய நடை போடி
உன் கண்ணு மூடும்போதே
என் கண்ணும் மூடிறனும்
சாமிய வேண்டி இருக்கேன்
தூங்கும் போதே சாவுவர
நீயும் நானும் இங்கே
நிரந்தரமா தூங்க வேணும்
தாயும் சேயும் ஆகத்
தரைக்குள்ள போக வேணும்.
( கற்பனைக்காரன் )