அந்த சுதந்திரம் தேவை
அந்த சுதந்திரம் தேவை


கவலையின்றி வெளியில் திரிந்த காலம் சென்றது,
இந்த கொரோனா என்னும் ஒரு பூகம்பம் வந்தவுடன்.
சற்றே மறந்தேன் என் மகிழ்ச்சியான சுதந்திர நடையை,
வீட்டின் உள்ளே நடக்க பழகிகொன்டேன் அதன்பின்.
தவறியதில்லை ஒரு பொழுதும் தோழிகளை பார்க்க,
ஆனால் இன்று செயலி மூலம் சந்திக்கிறேன் கொரோனாவால்.
பாத்து பாத்து பக்குவமாக சமைக்க கற்றுக்கொண்டேன்,
மளிகை பொருட்கள் சற்றே தீராத வரைக்கும்.
எனது புதிய ஆபரணமானது முக கவசம்,
ஒரு பொழுதும் அணிய மறந்ததில்லை வெளியே ப
ோகையில்.
பூங்காவில் நடந்து சென்று இயற்கையை ரசித்த காலம் போனது,
இன்று வீட்டின் ஜன்னலில் இயற்கை காற்றை எதிரிபாத்து காத்திருக்கிறேன்.
அளவிலா நண்பர்கள் உறவுகள் விழாக்கள் சூழ ,
எவ்வளவு இன்பமான தருணங்கள் நிறைந்ததாய் இருந்தது.
வாழ்க்கை ஒரு மிக பெரிய கடல் போன்றது என்பார்கள்,
உண்மைதான் அதை கடந்து வந்தபின் தெரியும் கடந்த பாதை.
இப்பபோது எண்ணுகிறேன் அந்த இன்பமான நாட்கள்
திருப்பிமி வராதா, அந்த சுதந்திர வாழ்க்கை மீண்டும் தேவை.