அனுபவப் பாடம்
அனுபவப் பாடம்


ஏதோ ஒரு சூழ்நிலையும்
என்றோ ஒரு ஏமாற்றமும்
வாழ்வில் அரங்கேறுகையில்
அது வாழ்வின் ஒரு பகுதியென -
கடந்து சென்றே விடலாம்!
தோல்வியும் ஏமாற்றங்களுமே
தொட்டதில் எல்லாம் ஒட்டிக் கொண்டிருந்தால் ?
தோல்வியையும் இரசிக்கவே
கற்றுக் கொள்வோம் !
அந்த வாழ்க்கை பாடம் கற்பிக்குமே
எந்த ஆசானும் கற்றுத் தராததை
அனுபவப் பாடமாய் !