அம்மா
அம்மா


அம்மா...
என்று நான் அழைத்து!
நீ திரும்பி..விரும்பி...
பார்த்து...சிரித்து...
முறைத்து!
வருடங்கள் மறைந்தோட!
நீ இல்லா வெறுமை!
என் வாழ்வின் வறுமை!
உன் ஒவ்வொரு துளி அன்பும்..
ஆழ்கடலுக்குச் சமம்!
அக்கறை அது பொதுமறை!
உன் நினைவின் விண்மீன்
தோரணம்!
என் காணிக்கை...
கோவிலுக்குப் போகாத
குறை தீர்க்கும் காரணி நீ!
உன் சமையல்!
வெள்ளிக்கிழமை கோலம்!
உழைப்பு! அலுப்பு!
வெகுலித்தனம்! சாதூர்யம்!
உன்னிடம் என்
சண்டித்தனம்.....நீ சூட்டிய..
மார்கழி மாத பூக்கள்!
பள்ளி செல்ல அடம்பிடித்த
என்னை... தலைக்குமேல்
தூக்கிப் பந்தாடியது!
மறப்பதெக்கணம்!
இடி இடித்தால் பயம் போக!
அர்ச்சுனா... சொல் என்றாய்!
என் தலையில் இடி இறக்கி..
எங்கு சென்றாய்...
என் அன்புஅம்மா!!!