அம்மா
அம்மா
அன்று ....
தான் பெற்ற பத்து பிள்ளைகளில் ஒரு பிள்ளையாவது டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டாள் என் அம்மா.
மூத்த ஆறு ஆண் மகன்களும் மருத்துவம் படிக்கப் போவதாக பொய் சொல்லி... மெக்கானிக் இன்ஜினியரிங் படிப்பதை அறிந்து கண்ணீர் சிந்தினாள் என் அம்மா.
பள்ளிப்படிப்பில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிய என்னை' டாக்டருக்கு படிக்க வேண்டும் நீ 'என
கண்ணீர் சிந்தினாள் என் அம்மா .
இன்று...
அறுபது வயதில் நான் ஆராய்ச்சி படிப்பு படித்து டாக்டராக நின்ற போது...
என் கண்கள் கலங்கின அம்மா உன் நினைவால்!
