அமைதியின் குரலொழி
அமைதியின் குரலொழி
அநீதியின் அரவணைப்பில்
நியாயங்கள் முடங்கிவிட
அமைதியில் குரல்கள்
அங்கே மௌனமாகிக் கிடக்க
குரல்களின் மௌனங்களை
ஒழித்து நேர்பட
பேச எழுந்து வா!
படிப்பறிவு வேண்டுமென
பலரும் பறை சாற்ற
உலக அரங்கில் போதையும்,
பாலினசீண்டலும்
இன்னமும் நடைபெறுவதேனோ!
பாரதியின் புதுமைப்பெண்ணும்
நடைமுறை அவலங்களை
நேரில் கண்டுதான் குரலடங்கி
போனாளோ!