STORYMIRROR

Chidambranathan N

Classics

3  

Chidambranathan N

Classics

ஆலமர இலை

ஆலமர இலை

1 min
206

ஆலமரத்தின் கிளையிருந்து!
ஆலமரத்திற்கே கூறாமல்!
ஆடிக்கொண்டே அந்த ஒற்றை இலை!
ஆமை வேகத்தில் அமைதியாகத் தரையிறங்கியது!


இரத்தலின் விதிப்படி!
இலை இறந்துவிட்டதாக!
இளவேனில் காலத்தில் அந்த ஆலமரம் வருந்தியது!


உயிர்த்தலின் விதிப்படி!
உதய காலத்தில் உயிர்பெற்று விட்டதாக!
உயர்நிலையாக நினைத்தது அந்த ஆலமர இலை!


விடுதலை பெற்ற உணர்வோடு!
விளையாட்டாய் வந்து விழுந்த இடம்!
விவசாய நில மண்புழு உரம் சேம்பிபுக் கிடங்க்கு!


மருத நிலத்தில் விழுந்த இலை!
மகிழ்ச்சியோடும் மண்வாசனையோடும்!
மஞ்சள் சாகுபடிக்கு உரமாக மாற பயணப்பட்டது!


வயலுக்குச் செல்லும் பாதையெல்லாம்!
வணிகமயமாகக் கலந்து கொண்டே இருந்தன! 
வஞ்சம் தீர்த்துக் கொண்ட தொழிற்சாலைக் கழிவுகள்! 
வறுமையில் வாடும் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்காக! 


அறுவறுப்பு கொண்டு முகம் சுளித்தது அந்த ஆல இலை! 
ஆடு மாடு கால்நடைக் கழிவுகளைக் கண்டு அல்ல! 
ஆதிக்க வர்க்கத்தினரின் தொழிற்சாலைக் கழிவுகளைக் கண்டு! 


ஆடிமாதத்தில் ஆவேசமாக வீசிய காற்றில்!
ஆடிக்கொண்டே வந்து அமைதியாகத் தரையிறங்கிய இடம் சுடுகாடு! 


மயானத்தில் ஆல இலை கற்றுக் கொண்ட உண்மை! 
மனிதர்கள் இயற்கையை அழிக்கிறார்கள்! 
மனிதர்கள் இயற்கையால் அழிக்கப் படுகிறார்கள்! 



Rate this content
Log in

Similar tamil poem from Classics