15.விலங்குடைப்பு
15.விலங்குடைப்பு
பெண்..
என்பவள்!
மிகச்சுலபமாக
கையாண்டுவிடக் கூடிய..
ஒரு போகப்பொருள்!
எனும் போக்கு
தொடரும் வரை!
பெண்களின் பாதுகாப்பு
கேள்விக்குறியே...
பிறந்து சிலமாதமே
ஆன மழலைக்கும்...
ஏழு பருவம்
கடந்தவளுக்கும்...
சமூகம் தன்
பாதுகாக்கும் கரங்களை!
வலுப்படுத்தவில்லை!
அனைத்திலும் கிடைத்த
விடுதலை... என்றோ?
இந்த கொடுமையில்
இருந்து!