Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

வறுமை

வறுமை

2 mins
252


வறுமை

கண்ணை கட்டி காட்டில் விட்டது போல மலை முகட்டில் நின்று கொண்டு இருந்தாள்.அவள் பெயர் நந்தினி.


கணவன் வீட்டில் இருந்து எந்த காரணமும் இன்றி விரட்டி அடிக்க பட்டாள்.நடுநிசியில் எங்கு செல்வது என்று தெரியாமல் மலை உச்சிக்கு சென்று கீழெ குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தான் பலமாக வீசிய காற்றை பொருட்படுத்தாமல் நின்று கொண்டு இருந்தாள்.

பலமாக வீசிய காற்றே அவளை தூக்கி பள்ளத்தில் வீசி விடும் போல இருந்தது.அவளுடைய பெற்றோருக்கு அவளை திருமணம் செய்து அனுப்பும் அளவிற்கு தான் வசதி இருந்தது.

ஆனால் கணவன் வீட்டில் பேராசை பிடித்தவர்கள்,இன்னும் பொன்னும் பொருளும் வாங்கி வா என்று துன்புறுத்தி வந்தனர்.

கணவனிடம் முறையிட்டு பார்த்தாள்.அவனும் அவனுடைய பெற்றோருக்கு சாதகமாக தான் பேசினான்.அவனே செலவிற்கு அவனுடைய அம்மாவிடம் இருந்து தான் வாங்க வேண்டும்.அவனுக்கென்று ஒரு தொழில் இல்லை.கிடைக்கும் கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை அவனுடைய அம்மா,பழைய கடனுக்கு சரி ஆகி விட்டது என்று வாங்கி கொள்வாள்.

நந்தினி வேலைக்கு சென்று சம்பாதித்து அவர்கள் கேட்கும் தொகையை தவணையில் கொடுக்க அனுமதி கேட்டும் கிடைக்காமல்,தண்ட சோறு போட முடியாது என்று வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள்.

மடிந்து போகலாம் என்று மலை முகட்டுக்கு வந்தவழுக்க ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது.

ஒரு ஆட்டு குட்டி வழி தவறி வந்தது,இவளை பார்த்ததும் அருகில் வர,இவள் அதை தடவி கொடுக்க,அது மெதுவாக இறங்க தொடங்கியது.அவளும் தன் முடிவை மாற்றி கொண்டு அதன் பின் நடக்க,மலை அடிவாரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் சென்று கத்த,ஒரு வயதான பாட்டி,அதன் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க,பாட்டி செல்லமாக வளர்த்த ஆட்டுகுட்டி ஒரு பெண்ணுடன் நிற்பதை பார்த்து இரட்டை சந்தோசம்.

அந்த பெண்ணை குடிசைக்குள் அழைத்து குடிக்க தண்ணீர் கொடுத்து,பசியாற கொஞ்சம் ராகி களி யும் கொடுக்க,அதை சாப்பிட்ட நந்தினிக்கு புது தெம்பு வந்தது.

யார் துணையும் இல்லாத வயாதன பாட்டி நம்பிக்கையோடு வாழும் போது ,தனக்கு வாழ முடியாதா என்று தன்னை தானே கேட்டு கொண்டாள்.

அந்த பாட்டிக்கு துணையாக இருந்து கொண்டு,பாட்டியின் ஆடுகளை மேய்த்து வர,பாட்டி தினமும் அவளுக்கு சாப்பாடு போட்டு காப்பாற்றி வந்தார்.

இப்போது பாட்டியின் ஆட்டு பண்ணையில் எண்ணிக்கை மூன்றில் இருந்து பத்தாக உயர்ந்து விட்டது.நந்தினியின் வாழ்க்கை தரமும் உயர்ந்து விட்டது.இன்னும் ஆடுகள் வாங்க பாட்டி கூட சந்தைக்கு கிளம்பி கொண்டு இருந்தாள்.

வழியில் தன் கணவனை பார்த்த நந்தினி,என்னுடன் வந்து விடு நாம் ஆடு மேய்த்து பிழைத்து கொள்ளலாம் என்று கூற அவனும் அவனுடைய பெற்றோரை விட்டு தயங்கிய படி வந்து சேர்ந்தான்.

முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract