வண்ணங்கள்
வண்ணங்கள்


அன்புள்ள நாளேடே,
வண்ணங்கள்....நினைக்கையிலே எத்தனை எத்தனை உணர்வுகள் மனத்திலே எண்ணங்களாக அலைமோதுகிறது. வண்ணம் சுமந்த எதுவுமே, சற்று எழில் கூடித் தான் தெரிகிறது.
வானவில்லின் வண்ணங்களில் இலயிக்காதோரும் உண்டோ...சிகப்பு, பச்சை,ஊதா என இம்மூன்று அடிப்படை வண்ணங்கள் மாறி மாறி, பல்வேறு விகிதாச்சாரங்களில் சேர்ந்து, உருவாக்கும் வர்ண ஜாலங்கள் தான் எத்தனை எத்தனை.
இயற்கை காட்டும் வண்ணங்கள் எத்தனை எத்தனை? பூச்சிகள், விலங்குகள், பறவைகள் இவற்றிலும் ஆயிரமாயிரம் வர்ண ஜாலங்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப, மரங்களின் இலைகளில் ஏற்படும் வண்ண மாற்றங்கள எத்தனை எத்தனை !
மேன்மையான எண்ணங்களை எண்ணுவோம். நம் எண்ணங்களுக்கும் வண்ணங்கள் உண்டு. வண்ணமயமான எண்ணங்கள் வளமாக்கும் வாழ்க்கை தனையே.