அன்புள்ள நாளேடு - நாள் 4
அன்புள்ள நாளேடு - நாள் 4


அன்புள்ள நாளேடே,
21 நாட்கள் விடுமுறை. பொழுதை எப்படி போக்குவது என்று எண்ணி கவலைப் படுவதை விடுத்து, என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.
1, புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருப்பவர்களெனில், புத்தகங்கள வாசிக்கலாம். குழந்தைகளுடன் புத்தகங்கள் வாசிக்கலாம். தொலைக்காட்சி,கைபேசி என எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகட்கு இது ஓர் மாறுதலாக இருக்கும்.
2, தாயம், சதுரங்கம், பாம்புத் தாயம்,பல்லாங்குழி போன்ற பல மறந்து போன விளையாட்டுக்களை மீண்டும் விளையாடலாம்.
3, பிடித்த திரைப்படங்களை பார்க்கலாம்.
4, கலை அல்லது கைவினை, தெரிந்திருந்தால் செய்ய முடியாது போன சந்தர்ப்பங்களை, இப்போது மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம்.
5, நம் இனிய நினைவுகளை மீட்டெடுத்துத் தரும் பழைய புகைப்படஙகள், நண்பர்களிடம் கையெழுத்து வாங்கிய ஆட்டோகிராப் புத்தகங்களை மீண்டும் புரட்டிப் பார்த்து, இனிய நினைவுகளில் மூழ்கிப் போகலாம்.
இப்படி எத்தனையோ வழிமுறைகள். நலமாய் இருப்போம். வாழ்க வளமுடன்.