பகிர்ந்து உண்போம்! பசியாறுவோம் !
பகிர்ந்து உண்போம்! பசியாறுவோம் !


பல்பொருள் அங்காடிக்கு வந்து சேர்ந்தான் மித்ரன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு
பதினைந்து நாட்கள் ஆகி இருந்தன. கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் வரிசையில் நின்றிருந்தனர். குறிப்பிட்ட அளவிலான மக்களே கடையினுள் அனுமதிக்கப் பட்டனர்.
தன் முறைக்காக காத்திருந்தான் மித்ரன். கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேர காத்திருப்பிற்குப் பின், கடையினுள் நுழைந்தான். பெரும்பாலான உணவுப் பொருட்கள் எதுவும் இல் லை. அந்த பகுதிகள் எல்லாம் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
பழ வகைகள், பிரெட், மாமிச உணவு வகைகள், சமைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் என உணவுப் பொருள் சார்ந்த பெரும்பாலானவை அனைத்தும் காலி.
மிச்சம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தான் மித்ரன். ரொட்டிகளும், பிஸ்கட் மற்றும் ரஸ்க் இருக்கும் அடுக்கில், மேல் தட்டில், பின்னால் இரண்டு பிரெட் பாக்கெட்டுகள் மட்டும் இருந்தன. அவற்றை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
அந்நேரம், ஒரு முதியவர், பிரெட் எடுக்க வந்தார். மேலோட்டமாக பார்த்தவர், அனைத்தும் காலியாகி விட்டது என்றெண்ணியபடி அவ்விடம் விட்டு அகல, மித்ரன் உடனே, மேலிருந்து எடுத்த இரண்டு பிரெட் பாக்கெட்டிகளையும், முத்தியவரிடம் கொடுக்க, அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, மித்ரனை வாழ்த்திச் சென்றார்.
அடுத்து வந்த ஊரடங்கு நாட்களில், கடையில், ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவ்வளவு தான் அளவு என வரையறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இது, அனைவருக்கும் உணவுப் பொருட்கள் கிடைக்க ஏதுவாக அமைந்தது.