வளமான எதிர்காலம் நம் கையில்
வளமான எதிர்காலம் நம் கையில்
ஒரு முறையாவது நான் அந்த இடத்திருக்கு செல்ல வேண்டும் என மனதில் எண்ணியவாறு இருந்தான் அசோக். அப்போது," அடேய், அசோக்கு இங்கு வாடா. வந்து இந்த பைப்பை கொஞ்சம் சரிபாரு ஒரே தண்ணீர் ஒழுகுது", என்றால் தாமரை.
தாமரை அசோக்கின் அம்மா, அவளுக்கு அசோக்கை மேற்படிப்பு படிக்க வைக்க ஆசை. அசோக்கின் அப்பா குமார், இயற்கை எய்தி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த சூழலில் தமரமாய் கடினமா உழைத்து தன மகனை டிப்ளமோ வரை படிக்கவைத்துவிட்டாள்.
அசோக் ஒரு புத்திசாலி, பொறுப்பு மிகுந்த மகன். அவன் அம்மா, இட்லி சுட்டு தன்னை படிக்கச் வைப்பதை அறிந்து நல்ல மதிப்பெண்களில் தெறிச்சி பெற்றான்.
அவனுக்கு அவன் அம்மாவை சுமையில் இருந்து இறக்கிவைக்க ஆசை. அதனால் கிடைத்திருந்த வேலைக்கு செல்ல எண்ணினான். அவன் அம்மாவோ, வேண்டாம் நீ மேலே படித்தால் நாம் இன்னும் நல்ல வாழலாம், என கூறினார். அவனின் எதிர்காலத்தை பற்றிய கவலை தன தாமரைக்கு எப்போதும்.
எதிர்காலத்தை பற்றிய சிந்தை வரும் தருணத்தில் தன் மகன் நன்கு வாழ்வதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தாமரைக்கு உண்டு.
ஆனால் அசோக், அம்மா நான் வேலைக்கு செல்கிறேன், சம்பாதிக்கும் பணித்தில் நம் செலவு போக, சிறிதை உன் சிற்றுண்டி கடை அமைப்பதற்கும், என் மேல் படிப்பிற்கும் சேமிக்கலாம். சேமித்தல் எதிர்காலத்தில் அது நமக்கு மிக உதவியாக இருக்கும் என்றான்.
வருடங்கள் சில ஓடின," அசோக் சிற்றுண்டி கடை மிக அருமையான வரவேற்புடன் அன்று துவக்க விழாவை நோக்கி பிரமாண்டமாய் நகரின் மிக முக்கியமான சாலையில் அமைக்ப்பட்றிருந்தது. அங்கு அனைத்து மக்களும் அவளுடன் காத்திருந்தனர்.
ஒரு வெள்ளை கார் வந்தது அதிலிருந்து அசோக் இறங்கி வந்தான். ஆம், அசோக் மேற்படிப்பு முடித்து இன்று அராசு நிறுவனத்தில் பொறியாளர் பணியில் உள்ளான். அவன் அம்மா தாமரைக்கு பெருமை மற்றும் உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி.
அசோக் முன்பே தன் எதிர்காலத்தை எண்ணி சிறப்புடன் செயல் பட்டது போல நாமும் எதிர்காலத்தை எண்ணி முயன்றால் நாமும் வெற்றி வந்து சேரும்.
நம் எதிர்காலம் நம் கையில்தான் என்பதற்கு அசோக்கின் வாழ்க்கை ஒரு சிறந்த பாடம்.
