வள்ளுவர் காட்டிய ஊருணி
வள்ளுவர் காட்டிய ஊருணி


தண்ணீருக்காக இன்னமும் எவ்வளவு நாள்தான் சுற்றுவது? வீட்டிலேயே ஒரு போர் பைப்பைப் போட்டால்தான் என்ன?
போட்டால் தண்ணீர் வரும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது.
இவ்வளவுதான் பணம் என வைத்துக்கொண்டுதான் போர் போட ஆரம்பிக்கவேண்டும். இல்லையென்றால் வெறுங் குழியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கவேண்டும்.
கணவனும், மனைவியுமாக இரவில் திண்ணையில் படுத்தபடி பேசியதை போர் போடும் கம்பெனி முதலாளி ரகீம் சாலை ஓரமாக நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தார். மறுநாள் காலை ஊர் பொது கிணற்றில் சாரு பாட்டி தண்ணீர் எடுத்து வீட்டிற்குள் சென்றதை உறுதி செய்துகொண்டபின் அடுத்த வீட்டு ராவுத்தரிடம் பேச்சு கொடுத்தார். அடுத்த வீட்டு சாரு பாட்டி குடும்பத்தைக் கேட்கறீங்களா?
ஆமாம்!
அது அந்தம்மா வீட்டுக்காரர் ரொம்ப நல்லவருங்க! இந்த கிணற்றையே அவங்க குடும்பம்தான் ஊருக்கு தண்ணீர் வேணும்கிறதுக்காக செலவு பண்ணி உருவாக்கினாங்க! எதிர்பாராதவிதமா குடும்பத்துல ஒரு சின்ன குழப்பத்துல பணம் வரலை!
அதனால வீட்டுக்கு போர் போட முடியாமல் திணறுகிறார்கள்.ஆமாம்! நீங்க யாரு?
நான் போர் போடற கம்பெனி நடத்துறவன். யாரோ ஒரு ஆள் ஃபேஸ்புக்கிலேயும், டூவிட்டர்லயும் இவர் உருவாக்கின கிணறு குறித்து எழுதி இருந்தாங்க…அதான் உண்மை நிலவரம் என்னன்னு தெரிஞ்சிட்டு போகலாம்னு வந்தேன். திருக்குறளை அழுத்தமாக வாசித்திருப்பார்போலத் தெரிகிறது…..
ஒண்ணு தெரியுமா உங்களுக்கு? அவர் அரசியல்ல வரப்போகிறார்னு புரளியைக் கிளப்பி விட்டிருக்காங்க…….
இந்த ஏரியாவில் எங்கு தோண்டினாலும் தண்ணீர் இல்லையே! இந்த பசலைப் பேட்டையில் இந்த இடத்தில் எப்படி தண்ணீர் இருந்தது?
இந்த இடத்தில் அத்தி மரம், நாவல் மரம், அம்மான் பச்சரிசியெல்லாம் இருக்கவும் ராம் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். நீரோட்டமெல்லாம் பார்க்கலை..அவர் வீட்டு மாடு எப்பவும் இந்த இடத்துலதான் படுத்துக் கிடக்கும். அதை வச்சு ஆளுங்களைக் கூப்பிட்டு கிணறு வெட்டி இப்ப ஊருக்கே தண்ணீர் தராரு!