விதி
விதி
அவன் சிறைச்சாலைக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது.தமிழ் புத்தாண்டு முதல் நாள் தான் அவனுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு சொன்னது கோர்ட்.
தமிழ் புத்தாண்டை கொண்டாட தன் குழந்தை மனைவியுடன் துணி வாங்க துணி கடைக்கு சென்று இருந்தான்.யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.அங்கு உள்ள கழிப்பறையை பயன்படுத்த சென்றான்.உள்ளே நுழைந்த பிறகு தான் தெரிந்தது,ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி தனி கழிப்பறைகள்.அதை கவனித்து ஆண்களுக்கு ஆன அறையை பயன் படுத்தி விட்டு,வெளியில் வரும் போது,பெண்களின் கழிப்பறையில் இருந்து ஒரு பெண் வெளியே வர,அந்த பெண் தடுக்கி விழ போக இவன் அவளை தாங்கி பிடிக்க,அந்த நேரத்தில் விழ போன பெண்ணின் சகோதரி இவளை தேடி கொண்டு உள்ளே வர,இவன் தாங்கி பிடித்ததை தவறாக நினைத்து கத்த,ஒரே ரகளை.கடைசியில் இவன் அந்த பெண்ணை மானபங்க படுத்த முயன்றதாக வழக்குதொடுத்து ,சந்தர்ப்ப சாட்சியங்கள் இவனுக்கு பாதகமாக அமைய தண்டனை அனுபவிக்கும்படிஆகிவிட்டது.சம்பந்த பட்ட பெண் அரசியல் தொடர்பு இருந்த காரணத்தால்,எல்லாமே இவனுக்கு எதிர் ஆக நடந்தேறியது.
அவனுடைய மனைவியும் குழந்தையும் இவனை பார்த்து விட்டு,இனி மேல் நமக்கு பண்டிகையும் வேண்டாம் புத்தாடையும் வேண்டாம்,சீக்கிரம் தண்டனை முடிந்து வெளியில் வந்தால் போதும் என்று நினைத்தனர்.கடையில் அந்த பெண்களை வைத்து,நாடகம் ஆடி அந்த கடைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த,பக்கத்துதுணி கடைக்காரன் செய்த சதி என்று தெரிய வந்தது.என்ன பயன்,அவன் சிறைக்கு வந்தது வந்தது தான்.இதை தான் விதி என்று சொல்வார்களா.
