விஞ்ஞானமும் மெய்ஞானமும்!
விஞ்ஞானமும் மெய்ஞானமும்!


இந்தியாவில் கோயில்களை அமைப்பதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சில இயற்கை பூலோக நியதிகளை கடைபிடித்து வந்துள்ளனர். அதைப் பற்றிய சில பதிவுகள் நம்மை மிகவும் வியக்க வைக்கிறது.
பஞ்சபூத ஸ்தலங்களாக குறிப்பிடப் படுவன:
நிலம் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
நீர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
நெருப்பு அண்ணாமலையார் கோவில்
காற்று திருக்காளத்தி களத்தீசுவரர்கோவில்
ஆகாயம் சிதம்பரம் நடராஜர் கோவில்.
இந்த பஞ்சபூத கோவில்கள் பூலோக ரீதியாக ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கிறது என்று இப்போது விஞ்ஞானம் சொல்கிறது. அது மட்டும் அல்ல. இன்னும் கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற சிவன் கோவில்களும் இதே நேர் கோட்டில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஜி.பி.எஸ். போன்ற புவியியல் சார்ந்த கருவிகளோ, செயற்கை கோள்களின் உதவிகளோ இன்றி நம் மக்களால் இப்படி அமைக்கப் பட்டிருக்கிறது என்னும் இந்தப் பத
ிவு மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. நம் இந்தியர்களின் இந்த சிறப்பு வியக்க வைக்கிறது.
சென்னையிலிருந்து கோவைக்கு எப்படியெல்லாம் போகலாம்? பேருந்தில் போகலாம்! விமானத்தில் செல்லலாம்! புகை வண்டியில் பயணிக்கலாம்! எப்படிப்போனாலும் கோவையை அடையலாம்! ஒவ்வொரு போக்கு வரத்து சாதனத்திற்கும் அதற்கான ‘மெட்டிரியலிஸ்டிக்’ சாதக பாதங்கள் இருக்கலாம் ( விமானத்தில் பணம் அதிகம் – ‘ரிஸ்க்’ அதிகம்! பேருந்தில் உடல் வருத்தம் அதிகம்! புகை வண்டியில் ‘பதிவு’ இருப்பது கடினம்!)
மதங்களும் அப்படித்தான்! எத்தனையோ மதங்கள் இருக்கலாம். இலக்கை அடைய அவை சொல்லுகின்ற முறைகளில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் எல்லா மதங்களின் இலக்கும் ஒன்றுதான். அது கடவுளை அடைவது என்பதுதான். எல்லா மதங்களும் போதிப்பது ஒழுக்கம்தான். எல்லா மதங்களின் நோக்கங்களும் ‘மனிதம்’ என்னும் உயர்ந்த நிலையை அடைவதுதான்.
நம் நாட்டில் இந்து, இசுலாம், கிருத்துவம், சீக்கியம், பௌத்தம் என எத்தனையோ மதங்கள் இருந்தாலும் மேற்சொன்ன அடிப்படையில் வழிநடத்திச் செல்லும் பெரியவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் பெருவாரி மக்கள் இயல்பாகவே மனித நேயர்களாக இருக்கிறார்கள். இதுவே இந்திய மக்களின் பெருமை.
(நமது இந்தியாவை மேலும் காண்போம்)